சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் போதைப்பொருள் உபயோகத் தடுப்பு தேசிய செயல்திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 4:24PM by PIB Chennai

போதைப்பொருள் உபயோகத் தடுப்பு தேசிய செயல்திட்டத்தின் கீழ் 30 வயதான சுரேஷ் குமாருக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அளிக்கப்பட்ட ஆதரவானது அவருக்குப் பொருளாதார நீடித்தத்தன்மை மற்றும் புதிய நோக்கத்தையொட்டிய முக்கியப்படியாக அமைந்துள்ளது.

போதைப்பழக்கத்திலிருந்து தனிநபர்கள் மீண்டு கண்ணியத்துடனும், நம்பிக்கையுடனும் தங்களுடைய வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க உதவுவதில் உரிய தருணத்தில் அளிக்கப்படும் ஆதரவு, தொடர்ச்சியான ஆலோசனை, குடும்பத்தின் பங்களிப்பு, கட்டமைக்கப்பட்ட மறுவாழ்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவருடைய பயணம் எடுத்துக்காட்டுகிறது.

தெலங்கானாவின் கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு சுரேஷ் குமார், நீண்ட காலமாக மது மற்றும் புகையிலைப் பழக்கத்தால் தனிப்பட்ட வகையிலும், சமூக ரீதியாகவும், நிதிசார்ந்த சவால்களையும் எதிர்கொண்டார். குடும்ப உறவினர்களுடான அவருடைய உறவுகள் மோசடைந்தன. எனினும் குடும்பத்தினர் அவருக்கு ஆதரவு அளித்து அப்பழக்கத்திலிருந்து விடுபட உதவுவதில் உறுதியுடன் இருந்தனர்.

2025 நவம்பர் 12 அன்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் போதைப்பொருள் உபயோகத் தடுப்பு தேசிய செயல்திட்டத்தின் கீழ் தெலங்கானாவின் கரீம் நகரிலுள்ள பிரக்குருதி சுற்றுச்சூழல் சங்கத்தால் நடத்தப்படும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையத்தில் சேர்ந்த போது பெரும் திருப்புமுனை ஏற்பட்டது.

மருத்துவக் கண்காணிப்பும், மனரீதியிலான ஆதரவும், போதைப்பொருளைச் சார்ந்திருப்பதை தவிர்க்க முடிந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332535&reg=3&lang=1   

***

SK/IR/SM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332928) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी