இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 5:28PM by PIB Chennai
சிறுபான்மையினர் நல அமைச்சகம் சார்பாக, அனைவரையும் உள்ளடக்குவதன் மூலம் வளர்ச்சி - திட்ட செயலாக்க ஆய்வு, பங்குதாரர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி 2026 நவம்பர் 4 அன்று புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தின் சமரஸ்தா அரங்கில் நடைபெற்றது. சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு. சியாமா பிரசாத் ராய், இயக்குநர் திருமதி. நேகா கிரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 80-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். திட்ட அமலாக்க முகவர்கள், பிற பங்குதாரர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், பிரதமரின் பாரம்பரியத்தை மேம்படுத்துதல் (பிஎம் விகாஸ்) திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. திட்ட செயலாக்கத்தில் உள்ள சவால்களைக் களைதல், பயிற்சியின் தரம், வேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய இணைச் செயலாளர் திரு. சியாமா பிரசாத் ராய், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் பயனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளாகவும், சிறந்த எதிர்காலமாகவும் மாறுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
அனைவரையும் உள்ளடக்குவதன் மூலம் வளர்ச்சி வெறும் முழக்கமல்ல என்றும், பயிற்சி பெறும் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள், பெண்கள் என ஒவ்வொரு பயனாளிக்கும் சான்றிதழுடன் கூடிய வேலைவாய்ப்பையும் பிரகாசமான எதிர்காலத்தையும் உறுதி செய்வதே இத்திட்டம் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332630®=3&lang=1
***
SK/IR/SM/RJ