இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 7:05PM by PIB Chennai
கோடக் மஹிந்திரா வங்கி-டாய்ச்சி வங்கி ஆக்டீன்ஜெசெல்ஷாஃப்ட் இடையேயான வர்த்தக நடவடிக்கைகள், அது தொடர்பான பிற பரிவர்த்தனைகளுக்கும் இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முன்மொழியப்பட்ட இணைப்பு, டாய்ச்சி வங்கி ஆக்டீன்ஜெசெல்ஷாஃப்ட்டின் (விற்பனையாளர்) சில்லறை வங்கிச் சேவை/தனியார் வங்கிச் சேவை, செல்வ மேலாண்மை வணிகத்தை (இலக்கு வணிகம்), அதன் இந்தியக் கிளைகள் மூலம் ஒரு தொடர் வணிகமாக, மொத்த விற்பனை அடிப்படையில், கோடக் மஹிந்திரா வங்கியால் (கையகப்படுத்துபவர்) கையகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், தங்களது இணை நிறுவனங்கள் மூலம், விற்பனையாளரின் மறைமுகமான முழு உரிமையுடைய துணை நிறுவனமான டாய்ச்சி இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதலீட்டு ஆலோசனை வணிகம், பங்கு பரிவர்த்தனை மேலாண்மை சேவைகள், வணிகத்தின் வாடிக்கையாளர்களை, கையகப்படுத்துபவரின் தொடர்புடைய முழு உரிமையுடைய துணை நிறுவனங்களுக்குப் பரிந்துரைப்பபங்குப தற்கான ஏற்பாடுகளைச் செய் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
கையகப்படுத்துபவர், ரிசர்வ் வங்கியால் வங்கி வணிகம் செய்ய உரிமம் பெற்ற வணிக வங்கியாகும். அதன் பங்கு மூலதனம் பம்பாய் பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. கையகப்படுத்துபவர், இந்தியாவில் சில்லறை வங்கிச் சேவை, செல்வ மேலாண்மை, நிறுவன வங்கிச் சேவை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. இதில் (அ) வைப்புக் கணக்குகள், (ஆ) கடன்கள், (இ) மூன்றாம் தரப்பு முதலீடு மற்றும் காப்பீட்டுத் தயாரிப்புகளின் விநியோகம்/பரிந்துரை, (ஈ) பங்கு பரிவர்த்தனை மேலாண்மை, முதலீட்டு ஆலோசனை, பிற தொடர்புடைய/துணைச் சேவைகளை வழங்குவதும் அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332721®=3&lang=1
(Release ID: 2332721)
****
SK/SV/SH