நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 7:02PM by PIB Chennai
உணவு, பொது விநியோகத் துறை, அதன் பொதுத்துறை நிறுவனங்கள், அதன் கீழ் இயங்கும்/இணைக்கப்பட்ட அலுவலகங்களுடன் இணைந்து, 2026 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை தூய்மை பராமரிப்பிற்கான சிறப்பு இயக்கம் 6.0-ஐச் செயல்படுத்தியது. இந்த இயக்கம், நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதும், அலுவலக வளாகங்களில் தூய்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த இயக்கம் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. ஆயத்தப் பணிகளுக்கான முதல் கட்டம் 2026 செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 30 வரையும், அதன் செயல்பாட்டுக் கட்டம் 2026 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரையும் நடைபெற்றது. முதல் கட்டமான ஆயத்தப் பணிகளின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள், பொதுமக்களின் குறைகள், அகற்றப்பட வேண்டிய கோப்புகள், தேவையற்ற பொருட்கள்/மின்னணுக் கழிவுகளை அகற்றுதல், தூய்மைப்படுத்தப்பட வேண்டிய அல்லது அழகுபடுத்தப்பட வேண்டிய இடங்கள் கண்டறியப்பட்டன.
இந்தக் காலக்கட்டத்தில், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி நடைபெற்றது. அதில், தூய்மை பராமரிப்பிற்கான சிறப்பு இயக்கம் 6.0-ஐச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான தேவையான வழிகாட்டுதல்களை அமைச்சர் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332719®=3&lang=1
(Release ID: 2332719)
****
SK/SV/SH