இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 7:10PM by PIB Chennai
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராய்ரங்பூரில், ஆயுதப்படை மருத்துவ சேவைகள் அமைப்பு 'ஆபரேஷன் டிரிஷ்டி'-ன் 12-வது பதிப்பை வெற்றிகரமாக நடத்தியது. 2026 நவம்பர் 02 முதல் 04 வரை நடைபெற்ற இந்த பல்நோக்கு மருத்துவ முகாமில், 4,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், பார்வையை மீட்டெடுக்கும் வகையிலான 365 கண் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த முகாமின் மூலம், அப்பகுதி மக்களுக்கு மேம்பட்ட மருத்துவ சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டன.
ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் சந்தீப் தரேஜா, இன்று முகாமிற்கு வருகை தந்து, அங்கு ஆலோசனை பெற்று வருபவர்களுடனும், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பில் இருப்பவர்களுடனும் கலந்துரையாடினார். கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளுக்கு அவர் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளையும் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332725®=3&lang=1
****
SK/BR/SH