சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமான சேவையில் கண்ணியத்தை மேம்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி கையேடு வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 4:44PM by PIB Chennai

மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை, விமானப் போக்குவரத்து துறை சார்பில், இந்திய விமான போக்குவரத்து துறை சேவையை கண்ணியமாக மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு பயிற்சி கையேடு வெளியிடப்பட்டது.  புதுதில்லியில் 2026 நவம்பர் 4ம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு துறையின் கூடுதல் செயலாளர் திருமதி மன்மீத் கவுர் நந்தா, பயிற்சி கையேட்டை வெளியிட்டார். மாற்றுத்திறனாளிகளுக்கு கண்ணியமான, பாதுகாப்பான, சுதந்திரமான விமான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதை இந்த கையேடு வலியுறுத்துகிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய மன்மீத் கவுர் நந்தா, சர்வதேச விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக விமானத்தில் எகிப்திற்கு பயணம் மேற்கொண்ட மாற்றுத்திறனாளி வீராங்கனையின் கடினமான பயணத்தை நினைவுகூர்ந்தார். வீராங்கனையின் சக்கர நாற்காலி சேதப்படுத்தப்பட்ட நிலையில், பல இன்னல்களுக்கு பிறகும் அவர் விளையாட்டில் சாதித்ததாக குறிப்பிட்டார். இதுபோன்ற தடைகள், சூழலை தவிர்க்கும் பொருட்டு, விமான நிறுவனங்கள், பணியாளர்கள் பிரத்யேக வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார். விமான போக்குவரத்து பயணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கண்ணியமான முறையில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.  

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332557&reg=3&lang=1&_gl=1

****

SK/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2332795) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी