விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் துறையில் திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு மையமாக ஹைதராபாத் மேனேஜ் நிறுவனத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம்

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 5:19PM by PIB Chennai

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்திற்கு (மேனேஜ்), வேளாண் துறையில் திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு மையம் என்ற அங்கீகாரத்தை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் வழங்கியுள்ளது. 2026 நவம்பர் 2 அன்று புதுதில்லி கௌஷல் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய திறன் மேம்பாட்டுத் துறைச் செயலர் திருமதி தேபஸ்ரீ முகர்ஜி இந்த அங்கீகாரச் சான்றிதழை வழங்கினார். இந்த அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.

1987-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், வேளாண் விரிவாக்க மேலாண்மை, வேளாண் வணிக மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு முதுகலை பட்டயப் படிப்புகளை வழங்கி வருகிறது. விவசாயத் துறையில் புதுமையான அணுகுமுறைகளை ஊக்குவிப்பதுடன், விவசாய நிபுணர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் தேவையான பயிற்சிகளையும், கொள்கை ஆதரவுகளையும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

திறமை வாய்ந்த பணியாளர்களையும், தொழில்முனைவோரையும் உருவாக்க வேண்டும் என்ற மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, வேளாண் திறன் மேம்பாடு, தொழில்முனைவு நடவடிக்கைகளில் இந்த அமைப்பு தொடர்ந்து பணியாற்ற இந்த அங்கீகாரம் வழிவகுக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் திரு சஞ்சய் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332602&reg=3&lang=1&_gl=1

****

SK/PD/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2332769) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Telugu