தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி: இந்தூரில் மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 4:54PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், மத்தியப் பிரதேச அரசின் தொழிலாளர் துறை ஆகியவை தொழில் அமைப்புகளுடன் இணைந்து தொழிலாளர் நலன், சமூகப் பாதுகாப்பு குறித்த மண்டல அளவிலான திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்தூரில் 2026 நவம்பர் 3 அன்று நடத்தின. மத்தியப் பிரதேச தொழிலாளர் ஆணையர் சுஷ்ரி ஷீதலா பாட்லே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத்திய, மாநில தொழிலாளர் நலத் துறைகள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் ஆகியவற்றின் உயர் அலுவலர்கள், தொழில் துறைப் பிரதிநிதிகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள், அதன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள விதிகள் குறித்து தொழில்துறைத் தலைவர்கள், மனிதவள மேலாளர்கள், சட்ட நிபுணர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வேலைவாய்ப்புத் திட்டம், பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ஆகியவை குறித்தும் தொழிலாளர் நல உயர் அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். சட்டத்தின் நோக்கங்களை எளிதில் புரிந்துகொண்டு பின்பற்றும் வகையில், விதிகளின் கையேடு தொகுப்பும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த இந்த முயற்சி தொழிலாளர் நலச் சட்டங்களை முழுமையாகச் செயல்படுத்துவதை உறுதி செய்ய உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332572&reg=3&lang=1&_gl=1

***

AD/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2332754) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी