உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் புதிய இணையதளத்தை மத்திய அமைச்சர் திரு சிராக் பஸ்வான் தொடங்கிவைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 4:18PM by PIB Chennai
உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் புதிய அதிகாரபூர்வ இணையதளத்தை மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு சிராக் பஸ்வான் புதுதில்லியில் தொடங்கிவைத்தார்.
பயனாளர்களுக்குப் பாதுகாப்பான டிஜிட்டல் அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் இந்தப் புதிய இணையதளம் மேம்படுத்தப்பட்ட தரவுப் பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டுள்ளது. அத்துடன் தகவல்களைப் பல்வேறு மொழிகளில் பெறும் வகையிலும், தடையின்றி பெறும் வகையிலும் மேம்படுத்தப்பட்ட தேடல் வசதியைக் கொண்டுள்ளது. அமைச்சகத்தின் கொள்கைகள், திட்டங்கள், முன்முயற்சிகள், செயல்பாடுகள் குறித்த தகவல்களை எளிதாக அணுக இது வழிவகுக்கும்.
https://mofpi.gov.in/ என்ற புதிய இணையதளம் மூலம் இதை அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332531®=3&lang=1
***
AD/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2332753)
வருகையாளர் எண்ணிக்கை : 8