சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 3:46PM by PIB Chennai
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 42 வயதான தூய்மை பணியாளர் ரமேஷ் பாபு படேல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பல ஆண்டுகாலமாக கழிவுகள், தீங்கு விளைவுக்கும் பொருட்கள், தூசி, சுகாதாரமற்ற பணிச்சூழலுக்கு இடையே பணியாற்றி வருகிறார். தூய்மைப் பணிக்கான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தால், ரமேஷ் பாபு படேலின் உடல்நலம் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளானது.
குடும்பத்திற்கான வருமானத்தை ஈட்டும் முக்கிய நபராக இருக்கும் இவருக்கு உடல்நல பிரச்சினையால் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். இத்தகைய சிரமங்களுக்கு மத்தியில் பாதுகாப்பான, கண்ணியமான சூழலில் தூய்மைப் பணியை மேற்கொள்ள விரும்பினார். இந்நிலையில் மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் தேசிய இயந்திரமாக்கப்பட்ட தூய்மை பணி சூழல் திட்டத்தின் கீழ் தூய்மை பணிக்கான பாதுகாப்பு உபகரணங்கள் அவருக்கு வழங்கப்பட்டன. கையுறை, முககவசம், பாதுகாப்புக் காலணிகள், சீருடை உள்ளிட்டவை அவருக்கு வழங்கப்பட்டன. தூய்மைப் பணிகளை மேம்பட்ட பணிச்சூழலில் செய்ய இந்த உபகரணங்கள் அவருக்கு பேருதவியாக இருந்தன. முன்பைக்காட்டிலும், பாதுகாப்பாகவும், சுகாதார முறையிலும் பணியாற்றும் சூழல் உருவாகியுள்ளதாக ரமேஷ் பாபு படேல் தெரிவித்தார். தற்போது தன்னுடைய உடல்நலம் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், அடிக்கடி உடல்நலக்குறைவில் இருந்து விடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அவருடைய வருமானத்தில் நேரடியான மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், மேம்பட்ட ஆரோக்கியம், பணியிட பாதுகாப்பு அவருக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332501®=3&lang=1&_gl=1
***
AD/LN/SH