எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

92 ஜிகாவாட் மின்விநியோக அமைப்பில் எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்கான ரூ14,500 கோடித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 3:38PM by PIB Chennai

நாடு முழுவதும் 92 ஜிகாவாட் மின்விநியோக அமைப்பில் எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்கான ரூ14,500 கோடி மதிப்புள்ள திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

நடப்பு நிதியாண்டு முதல் 2030-31 நிதியாண்டு வரையிலான அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு, எரிசக்தி சேமிப்பிற்கான கட்டமைப்புகளை  மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு இடைவெளி நிதித் திட்டத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், இதுவரை செயல்பாட்டுக்கு வராத 92 ஜிகாவாட் எரிசக்தி சேமிப்புத் திறன் கட்டமைப்புகளை நாடு முழுவதும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். இத்திட்டம், நாட்டில் தற்போதுள்ள எரிசக்தி சேமிப்பு அமைப்பின் திறனில் 170%-க்கு சமமான புதிய திறன்களை உருவாக்க உதவுவதுடன், 2031-32-ம் ஆண்டிற்குள் தேவைப்படும் 411 ஜிகாவாட் எரிசக்தி சேமிப்பு அமைப்பின் திறனை அடைவதற்கும் உதவிடும்.

இந்தத் திட்டம், இந்தியாவின் மின்சாரத் துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பெரிய அளவில் ஒருங்கிணைப்பதற்கு வழிவகுப்பதற்கும், நம்பகமான, மலிவு விலையில் மற்றும் 24 மணி நேரமும் மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். இது பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகளின் உள்நாட்டு உற்பத்திக்கு உத்வேகம் அளித்து, இறக்குமதி சார்புநிலையைக் குறைத்து, நாட்டின் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தும்.

இந்தத் திட்டம், 60 ஜிகாவாட் நீர்மின் சேமிப்பு ஆலை திறன், 30 ஜிகாவாட்-பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு திறன், மாற்று எரிசக்தி சேமிப்பு தொழில்நுட்பங்கள் மூலம் 2 ஜிகாவாட் திறன் ஆகியவை மொத்த மதிப்பீடான ரூ 97,600 கோடி முதலீட்டில் உருவாக்கப்படவுள்ளது. இந்தத் திட்டங்களின் நிதி சாத்தியக்கூறை மேம்படுத்தவும், நாட்டில் பெரிய அளவிலான எரிசக்தி சேமிப்பு உள்கட்டமைப்பை நிறுவுவதை விரைவுபடுத்தவும் உதவிடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332486&reg=3&lang=1&_gl=

***

AD/SV/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2332748) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , Marathi , English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati