இடுகை இடப்பட்ட நாள்:
03 NOV 2026 6:05PM by PIB Chennai
உலக ஊக்கமருந்து எதிர்ப்பு விஞ்ஞானிகள் சங்கத்தின், 10-வது தர உறுதி மேலாளர்கள் கூட்டத்தில், தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகத்தின், வெளிப்புற ஆராய்ச்சி மானியக் கொள்கையை' மத்திய இளையோர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
புதுதில்லியில், நவம்பர் 2-ம் தேதி தொடங்கிய இந்த இரண்டு நாள் கூட்டத்தை, தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் விளையாட்டு, அறிவியல் துறைகளைச் சேர்ந்த சர்வதேசப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற டாக்டர் மன்சுக் மாண்டவியா,தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகத்தின் செய்திமடலையும் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஊக்கமருந்து பயன்பாட்டிற்கு எதிராக இந்தியா சகிப்புத்தன்மையற்ற கொள்கையைக் கொண்டிருப்பதை எடுத்துரைத்தார். விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்துவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்று அவர் கூறினார். ஒவ்வொரு வெற்றியும் திறமை, ஒழுக்கம், கடின உழைப்பின் மூலம் மட்டுமே பெறப்படுவதை உறுதி செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும் என்று திரு மனசுக் மாண்டவியா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332168®=3
***
SK/SV/PS