சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
03 NOV 2026 6:50PM by PIB Chennai
30 வயதான டாக்டர் அனிருத் பிரதான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது கல்விசார் லட்சியங்களை தொழில்முறை சாதனைகளாக மாற்றுவதில் பட்டியலின மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகைத் திட்டமான என்எஃப்எஸ்சி ஒரு முக்கிய ஆதாரமாக இருந்துள்ளது.
ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் அனிருத் பிரதான், தான் தேர்ந்தெடுத்த கல்வித் துறையில் சிறந்து விளங்க விரும்பினார். இருப்பினும், நிதி நெருக்கடிகளும் முறையான வழிகாட்டுதல் இன்மையும் அவரது உயர்கல்விப் பயணத்திற்குச் சவால்களாக அமைந்தன.
அவரது கல்விப் பயணத்தில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் என்எஃப்எஸ்சி திட்டம் ஒரு முக்கிய ஆதரவாக அமைந்தது. இத்திட்டத்தின் கீழ், அவருக்கு மாதம் ரூ. 31,000 உதவித்தொகையும், கூடுதல் செலவுகளுக்கான நிதியுதவியும் வழங்கப்பட்டன.
இந்த ஆதரவின் மூலம், டாக்டர் பிரதான் தனது முனைவர் பட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். அவர் தற்போது ஒடிசாவின் மாடல் டிகிரி கல்லூரியில் சமூகவியல் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார், இவரது அடிப்படை ஊதியம் ரூ. 63,000 ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332200®=48&lang=2
****
SK/RB/RJ