இடுகை இடப்பட்ட நாள்:
03 NOV 2026 7:31PM by PIB Chennai
நிர்வாகத் திறன், தூய்மை, வெளிப்படைத்தன்மை, மேம்பட்ட பொதுச் சேவை வழங்கல் ஆகியவற்றில் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி, துய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ஐ தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அமைச்சகமும் அதன் தொடர்புடைய அமைப்புகளும் 2,42,042 குறைகளைத் தீர்த்து வைத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 116.93 சதவீதத்தை எட்டியுள்ளன. 2 லட்சத்திற்கும் அதிகமான இயல் கோப்புக்கள் ஆய்வு செய்யப்பட்டு, 98,500 கோப்புக்கள் நீக்கப்பட்டன. மேலும், 70,191 மின்னணு கோப்புக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 170.45% ஆகும். பயன்படுத்தப்படாத பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ. 49,48,896 வருவாய் ஈட்டப்பட்டது. இது வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்த வழிவகுத்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332241®=48&lang=2
****
SK/RB/RJ