பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அறிவியல் முன்னேற்றத்தை மண்டல அளவிலான ஒத்துழைப்பாக மாற்றுவது குறித்த இந்தோ-பசிபிக் மண்டல மாநாடு

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 6:18PM by PIB Chennai

அறிவியல் முன்னேற்றத்தை மண்டல அளவிலான ஒத்துழைப்பாக மாற்றுவது குறித்த இந்தோ-பசிபிக் மண்டல மாநாடு புதுதில்லியில் தொடங்கியது.

இந்தியக் கடற்படையின் வருடாந்திர உயர்நிலை சர்வதேச உத்திசார் நடவடிக்கைகள் குறித்த இந்தோ-பசிபிக் மண்டல மாநாடு, 2026 நவம்பர் 3 அன்று புது தில்லியில் தொடங்கியது. கடற்படையின் அறிவுசார் அமைப்பான தேசிய கடல்சார் அறக்கட்டளை'யுடன் இணைந்து நடத்தப்படும் இந்த மூன்று நாள் மாநாடு, இந்தோ-பசிபிக் பகுதியில், அறிவியல், தொழில்நுட்பம், கல்விசார் ஒத்துழைப்பு' குறித்து ஆய்வு செய்கிறது.

இதில், அறிவியல் முன்னேற்றங்கள், நிறுவனங்களுக்கு இடையேயான  ஒத்துழைப்புக்களை, நடைமுறைக்கு உகந்த மண்டல அளவிலான  ஒத்துழைப்பாக மாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டில், இந்தோ-பசிபிக் பகுதியில், அறிவியல் அறிவு,  தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை , நீடித்த நிறுவன ஒத்துழைப்பாகவும், வலுவான கடல்சார் திறன்களாகவும், பகிரப்பட்ட மண்டல அளவிலான  மீள்திறனாகவும் மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332175&reg=48&lang=2   

****

SK/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332273) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी