சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
03 NOV 2026 4:13PM by PIB Chennai
ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் அறிவியல் ரீதியில் தூர்வாரி தோண்டி எடுக்கப்பட்ட உகந்த வண்டல் மண்ணை பீகாரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டங்களில் பயன்படுத்துதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகமும், பீகார் அரசும் கையெழுத்திட்டுள்ளன. புதுதில்லியில் நடைபெற்ற இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, பீகார் முதலமைச்சர் திரு சாம்ராட் சௌத்ரி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
நதி சஞ்சீவனி எனப்படும் இந்த முன்முயற்சி ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் நீரின் வளத்தை மீட்டெடுக்கவும், வெள்ளத்தடுப்பு மேலாண்மையை வலுப்படுத்தவும், வேளாண் நிலங்களை பாதுகாக்கவும், தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நீடித்த கட்டுமானப் பொருட்கள் வழங்கவும் முயற்சிக்கிறது. இது உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் அதே சூழலில், நீர் மேலாண்மை தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கு ஒருங்கிணைந்த அணுகு முறையை அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332058®=3&lang=1
***
AD/IR/PS/RJ