ஆயுஷ்
azadi ka amrit mahotsav

தேசிய சோவா-ரிக்பா நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பத்மா குர்மெத்-க்கு, முழுமையான ஆரோக்கியம் சார்ந்த நலவாழ்விற்கானத் தொலைநோக்குச் சிந்தனையாளர் விருது வழங்கபட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 4:11PM by PIB Chennai

தேசிய சோவா-ரிக்பா நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பத்மா குர்மெத்-க்கு, ஆரோக்கியம் சார்ந்த நலவாழ்விற்கானத் தொலைநோக்குச் சிந்தனையாளர் விருது வழங்கபட்டது.

லே நகரில் அமைந்துள்ள தேசிய சோவா-ரிக்பா நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பத்மா குர்மெத், பாரம்பரிய மருத்துவம், முழுமையான சுகாதாரப்  பராமரிப்புத் துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சத்ரபதி சாஹு ஜி மகாராஜ் பல்கலைக்கழகத்தால் இந்த விருது வழங்கப்பட்டது.

2026-ம் ஆண்டு அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை, அப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச சுகாதார மாநாட்டின் போது, அவருக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட்டை, உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தலைவர் திரு சதீஷ் மஹானா தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறையைச் சேர்ந்த பல முக்கிய நிபுணர்கள், கல்வியாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர். நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 42 புகழ்பெற்ற சுகாதார நிபுணர்கள், அவர்களது துறைகளில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக கௌரவிக்கப்பட்டனர்.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, டாக்டர் பத்மா குர்மெத், இமயமலைப் பகுதிகளில், சுகாதாரம், நல்வாழ்விற்கான சோவா-ரிக்பா நிறுவனத்தின்  முக்கியத்துவம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். குறிப்பாக, இமயமலைப் பகுதிகளில், முழுமையான ஆரோக்கியம், நல்வாழ்வை மேம்படுத்துவதில் பாரம்பரிய சோவா-ரிக்பா மருத்துவ முறையின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332057&reg=3&lang=1

***

AD/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332249) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati