பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சகம் சார்பில் சிறப்பு தூய்மைப் பணி

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 3:57PM by PIB Chennai

மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சகம் சார்பில் சிறப்பு இயக்கம் 6 மூலம், தூய்மைப் பணி, பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஆவணங்கள் மேலாண்மை உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டன. புதுதில்லியில் உள்ள துறைசார்ந்த அலுவலகத்தில் 2026 அக்டோபர் 26-ம் தேதி நடைபெற்ற நிகழ்வில் மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத்துறை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தார். மின்னணு கழிவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையை பார்வையிட்ட அமைச்சர், அலுவலக வளாகத்தில் உள்ள புதிய நூலகத்தை  திறந்து வைத்தார்.

மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சகம் முன்னெடுத்த சிறப்பு இயக்கம் 6 மூலம், 21 இடங்களில் தூய்மைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஆவணங்கள் மேலாண்மை மூலம் 747 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், 56 கோப்புகள் அப்புறப்படுத்தப்பட்டன. 753 மின்னணு கோப்புகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், 189 கோப்புகள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில், அவர்களின் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஓய்வூதியதியதாரர்களின் 9307 புகார்களுக்கு தீர்வு என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 10,198 புகார்களுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதன் மூலம் இந்த இலக்கு சாத்தியமானதாக, மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.     

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332053&reg=3&lang=1

***

AD/LN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332246) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी