சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கிய பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 1:59PM by PIB Chennai

தெலங்கானா மாநிலம், பெத்தபள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 40 வயதான இவர், போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால், வேலை, குடும்ப வாழ்க்கையில் பல்வேறு சவால்களைகளை எதிர்கொண்டார்.  குடிப்பழக்கத்தால், உடல்நலம் பாதிக்கப்பட்டதுடன் சமூக பொருளாதார ரீதியில் மிகவும் சிரமத்திற்கு ஆளானார். இந்த சூழ்நிலையில், மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறையின்கீழ் இயங்கும் போதைப்பொருள் தேவையை குறைப்பதற்கான தேசிய செயல் திட்டத்தின் மூலம் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து ரமேஷ் குமார் சிகிச்சை பெற்றார். அவருக்கு போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்கான விரிவான சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவக் கண்காணிப்பு, தனிநபர், அவரது குடும்பத்தினருக்கான கவுன்சிலிங், குழு சிகிச்சை, ஊக்கமளிக்கும் வகையிலான உரையாடல், போதை தடுப்பு சிகிச்சை, தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் ரமேஷ் குமார் போதைப்பழக்கத்தில் இருந்து படிப்படியாக மீண்டுவந்தார். தனிப்பட்ட முறையிலும், பணியிலும் நேர்மறையான மாற்றத்தை அவர் உணர்ந்தார். ரமேஷ்குமார் தற்போது மாதந்தோறும் 12 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார். போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கிய பயணத்தை மேற்கொண்டு வரும் ரமேஷ் குமார் தனது குடும்பத்தினருக்கு பொருளாதார ரீதியாகவும் உறுதுணையாக இருந்து வருகிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331985&reg=3&lang=1

***

AD/LN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332232) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali