நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுரங்கப் பணிக்குப் பிறகு அதை மறுபயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 1:30PM by PIB Chennai

சுரங்கத்தை மூடுதல் என்பது சுரங்கப்பணிகளின் சுழற்சி முறையில் ஒரு பகுதியாகும். எனினும், ஒரு சுரங்க பிராந்தியத்திற்கான பொறுப்பு சுரங்கப் பணிகள் நிறைவடைந்தவுடன் முடிவடைவதில்லை. சுரங்கப் பணிக்கு பிறகு நிலத்தை உற்பத்தி திறனுடன் பயன்படுத்துவதை உறுதி செய்தல், சுற்றுச்சூழல் மீட்பு, நீடித்த சமூக பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காக சுரங்கத்தை மறு பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒரு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. இத்தேவையை உணர்ந்து  மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிலக்கரி கட்டுப்பாட்டு அமைப்பு சுவிகல்ப்-சுரங்க மறுபயன்பாட்டு கருவியை உருவாக்கியுள்ளது.

இந்த சுவிகல்ப் சுரங்கப் பணிக்கு பின்னர், பொருத்தமான நிலப்பயன்பாட்டு வாய்ப்புகளை கண்டறிவதற்கு ஒரு அறிவியல் ரீதியான, வெளிப்படையான தரப்படுத்தப்பட்ட கட்டமைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், புவி-சுரங்க இயல்புகள், சுற்றுச்சூழல் நிலைகள், உள்கட்டமைப்பு இருப்பு, வளக்கட்டுப்பாடுகள், நிதிசார் பரிசீலனைகள், சமூகப்பொருளாதார காரணிகள் ஆகியவற்றை ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தில் இணைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331966&reg=3&lang=1&_gl=1

 

***

AD/IR/PS/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2332039) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी