அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

ஆதித்யா-எல்1 விண்கலத்தில் உள்ள விஇஎல்சி கருவி, விண்வெளி வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூரிய ஒளிக் கதிர்களின் சமச்சீரற்ற விரிவடையும் தன்மையை கண்டுபிடித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 12:17PM by PIB Chennai

ஆதித்யா-எல்1 விண்கலத்தில் உள்ள விஇஎல்சி கருவி, விண்வெளி வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூரிய ஒளிக் கதிர்களின்  சமச்சீரற்ற விரிவடையும் தன்மையை கண்டுபிடித்துள்ளது.

இந்தியாவின் முதல் சூரியவெளி ஆய்வு விண்கலமான ஆதித்யா-எல்1, ஒளிக்கதிர்கள் எவ்வாறு விரிவடைகின்றன என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவியுள்ளது. இது குறித்த புதிய தரவுகள், வானிலை ஆய்வுகளுக்கு மிக முக்கியதத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இத்தகைய சூரிய நிகழ்வுகள், செயற்கைக்கோள்கள், தகவல் தொடர்பு கட்டமைப்புகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

செப்டம்பர் 2023-ல் ஏவப்பட்ட ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள், தற்போது சூரியன்-பூமி இடையேயான எல்1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டு, சூரிய ஒளிக்கற்றைகளின் தன்மை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதில் மொத்தம் 7 ஆய்வுக்கருவிகள் உள்ளன. அவற்றில் முதன்மையான விஇஎல்சி கருவி, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான 'கொரோனா' பகுதியை, பல்வேறு முறைகளில் ஒரே நேரத்தில் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட இந்த  ஆய்வு, முன்பு கருதப்பட்டதைப் போன்று, சூரிய ஒளிக்கதிர்கள் எளிய சமச்சீர் குமிழி போல சூரியனிலிருந்து வெளிப்புறமாக விரிவடையவில்லை என்பதை முதன்முறையாக எடுத்துக் காட்டியது. மாறாக, அது சீரற்ற விரிவாக்கத்திற்கு உட்பட்டு, ஒரு சமச்சீரற்ற வடிவத்தை உருவாக்கிறது. சூரிய ஒளிக்கதிர்களின் இந்த விரிவாக்க வேறுபாடுகள், பூமியை நோக்கிப் பயணிக்கும்போது அதன் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, விண்வெளி-வானிலையில்  சமச்சீரற்ற தன்மையை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331935&reg=3&lang=1

(Release ID: 2331935)

------

AD/SV/SH 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2332037) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati