நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மத்தியப் பிரதேசப் பிரிவு, 595 கிலோ போதைப் பொருளை கைப்பற்றியது

இடுகை இடப்பட்ட நாள்: 02 NOV 2026 12:34PM by PIB Chennai

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மத்தியப் பிரதேசப் பிரிவு அதிகாரிகள், வாகன சோதனையின்போது, லாரி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 595.420 கிலோ அபின் செடித் துகளைக் கைப்பற்றினர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

 

 

உளவுத் தகவலின் அடிப்படையில், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மத்தியப் பிரதேசப் பிரிவு அதிகாரிகள், மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், பஞ்சாப் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட டலாரி ஒன்றை இடைமறித்துச் சோதனையிட்டனர். அப்போது, அந்த லாரியின் அடியில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மறைவிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 595.420 கிலோ எடையுள்ள அபின் செடித் துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

 

மீட்கப்பட்ட கடத்தல் பொருட்களும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம், 1985-ன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331788&reg=3&lang=1

 

***

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2331815) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu