பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாரத் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சி மாநாடு, கண்காட்சியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

எரிசக்திப் பாதுகாப்பின் எதிர்காலம் தூய மின் உற்பத்தியில் அடங்கியுள்ளது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 02 NOV 2026 7:15PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, பாரத் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சி மாநாடு, கண்காட்சியை புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கி வைத்தார். மாநாட்டில் உரையாற்றிய அவர், உலக அளவில், கொவிட்-19 பெருந்தொற்று முதல் தற்போது மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி வரை, முன்னெப்போதும் இல்லாத பல்வேறு தடைகளை எதிர்கொண்டு வருவதை குறிப்பிட்ட பிரதமர், இத்தகைய இக்கட்டான சூழலிலும், இந்தியா பொருளாதார வளர்ச்சியை சீரான முறையில் பராமரித்து வரும் விதம் குறித்து, 140 கோடி மக்களும் பெருமிதம் கொள்வதாக கூறினார். 

 

உலக அளவில் எரிசக்தி நெருக்கடிகளால் சூழப்பட்ட ஒரு முக்கியமான காலகட்டத்தில் இந்த உச்சி மாநாடு நடைபெறுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சூழல், அன்றாட வாழ்க்கை, நாட்டின் முன்னேற்றத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் ஒன்பதாவது கூட்டமும், பசுமை ஹைட்ரஜன் குறித்த நான்காவது மாநாடும், இந்த மாநாட்டுடன் இணைந்து நடைபெறுவதால், இந்த நிகழ்வு மிகவும் விரிவான பரிமாணத்தைக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில், உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் முதலீடுகள், தூய்மை எரிசக்தித் துறையில் மேற்கொள்ளப்பட்ட முறையான சீர்திருத்த நடவடிக்கைகள், நாட்டிற்கு வெளியிலிருந்து வந்த கடும் அழுத்தங்களிலிருந்து இந்தியாவைப் பாதுகாத்தன என்று பிரதமர் எடுத்துரைத்தார்.

இந்தியா தூய்மை எரிசக்தித் துறையில் முதலீடு செய்யாமல், புதிய கட்டமைப்புகளை உருவாக்காமல் இருந்திருந்தால், நாடு எதிர்கொண்ட நெருக்கடி, உலகின் பிற பகுதிகளைக் காட்டிலும் மிக மோசமானதாக இருந்திருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்டுள்ள உலக அளவிலான நெருக்கடிகள், எரிசக்திப்   பாதுகாப்பிற்கும், பொருளாதார பாதுகாப்பிற்கும் இடையேயான நேரடித் தொடர்பை வெளிப்படுத்தியுள்ளன என்று கூறிய பிரதமர், புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருக்கும் நிலை, உலக நாடுகளின்  பொருளாதாரத்திற்கு மீண்டும் மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.

 

ஏனெனில், புதைபடிவ எரிபொருள் வளங்கள் வரையறுக்கப்பட்டவை என்றும், அவை குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் காணப்படுவதாகவும் கூறினார். இதற்கு மாறாக, தூய்மை எரிசக்தி என்பது எல்லையற்றது என்பதையும், அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எரிசக்திப் பாதுகாப்பின் எதிர்காலம் தூய்மை எரிசக்தியில் அடங்கியுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை என்று திரு நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331758&reg=3&lang=1

(Release ID: 2331758)

 

 

***

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2331802) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , Khasi , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Odia , Kannada