இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2026 5:17PM by PIB Chennai
மத்திய சுரங்க அமைச்சகத்தின், தன்னாட்சி அமைப்புகள் சார்பில், சிறப்பு இயக்கம் 6 மூலம், மின்னணு கழிவுகளை தரம்பிரித்து அகற்றும் பணி நடைபெற்றது. இதுதவிர அலுவலகங்கள், பொது இடங்களில் தூய்மைப் பணி, ஆவணங்கள் மேலாண்மை உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. 96 இடங்களில் 134.92 டன் எடையுள்ள மின்னணு கழிவுகள் அகற்றப்பட்டதன் மூலம் சுமார் 1.2 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. 465 இடங்களில் தூய்மைப் பணி நடைபெற்ற நிலையில், பொதுமக்களுக்கு சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. ஆவணங்கள் மேலாண்மை மூலம், 11,282 ஆவணங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதுதவிர, பொதுமக்களின் புகார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் அலுவலகம், மாநில அரசுகளின் பரிந்துரைகளுக்கும் உரிய தீர்வுகாணப்பட்டதாக மத்திய சுரங்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331644®=48&lang=1
***
TV/LN/SH