சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கல்வி உதவித்தொகை மூலம் உயர்கல்வியில் சாதித்த தமிழ்நாட்டு மாணவர்

இடுகை இடப்பட்ட நாள்: 02 NOV 2026 4:33PM by PIB Chennai

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் பவித்ரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 32 வயதான இவர், ஆராய்ச்சி படிப்பு படிக்க வேண்டும் என ஆவல் கொண்டிருந்தார். இந்நிலையில், இதற்கான உதவித்தொகை பெற வேண்டி, பட்டியலின மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். இதைதொடர்ந்து , 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பவித்ரனுக்கு தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. கல்விக்கான செலவு, வீட்டு வாடைகைப்படி என  ரூ.5 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில், தனது முனைவர் பட்டப் படிப்பை அவர் வெற்றிகரமாக முடித்தார். தேசிய கல்வி உதவித்தொகை தனது லட்சியத்தை அடைய உதவியதாக பெருமிதம்  தெரிவித்தார். உயர்கல்வியின்போது நிதி சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள இந்த நிதி உதவியதாக அவர் கூறினார். குடும்பத்தின் பொருளாதார சூழல் முன்பைக்காட்டிலும் நிலையானதாக மாறியுள்ளதாகவும் பவித்ரன் குறிப்பிட்டார். கல்வி மட்டுமின்றி தொழில்ரீதியாகவும் அடுத்தகட்டத்திற்கு செல்ல இந்த நிதி பேருதவியாக இருந்தாகவும் கூறினார். முனைவர் பட்டப் படிப்பு முடித்துள்ள பவித்ரன் தற்போது முழுநேர பணியாளராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331586&reg=48&lang=1

***

TV/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2331748) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी