பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போர்முறை தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கு புதுதில்லியில் தொடங்கியது

இடுகை இடப்பட்ட நாள்: 02 NOV 2026 4:53PM by PIB Chennai

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் கீழ் இயங்கும் கூட்டுப் போர்முறை ஆய்வு மையம் ஏற்பாடு செய்திருந்த இணைய தொழில்நுட்பம் சார்ந்த அறிவார்ந்த போர்முறை தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கு 2026 நவம்பர் 2 அன்று புதுதில்லியில் தொடங்கியது.

இணைய நடவடிக்கைகள், செயற்கை நுண்ணறிவு, தகவல் முறை, மனித அறிவாற்றல் ஆகியவற்றின் ஒருங்கிணைப்போடு பாதுகாப்பு சவால்கள் குறித்து விவாதிப்பது இக்கருத்தரங்கின் நோக்கமாகும். குறிப்பாக, இந்தியாவில் மாறிவரும் அச்சுறுத்தல் குறித்து இது கூடுதல் கவனம் செலுத்துகிறது. இணைய தொழில்நுட்பம் சார்ந்த அறிவுசார் போர்க்களம், இந்தியாவின் மாறிவரும் அச்சுறுத்தக்கூடிய சூழல், தகவல் சூழலை வடிவமைக்கும் காரணிகள், வழிமுறைகள் உள்ளிட்ட செயல்பாடுகளின் கட்டமைப்பு குறித்து கருத்தரங்கில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் ராணுவ வீரர்கள், முன்னாள் படை வீரர்கள், அவர்களுடைய குடும்பத்தினரின் நலன் குறித்தும், சைபம் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் முறைகளை கையாளுதல் ஆகியவற்றின் வளர்ந்துவரும் ஒருங்கிணைப்பு குறித்து தெளிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331606&reg=48&lang=1

***

TV/IR/LDN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2331725) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी