திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2026 5:32PM by PIB Chennai
கவுகாத்தியில் சர்வதேச இடப்பெயர்வுக்கான திறன் மேம்பாடு, பிஎம்-சேது குறித்த நிகழ்ச்சிக்கு மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய அரசு, அசாம் அரசு உயர் பிரதிநிதிகள், தொழில்துறையினர், திறன் மேம்பாட்டுத் துறையினர் ஆகியோர் கலந்துகொண்டனர். வடகிழக்குப் பிராந்தியத்தின் திறன் மேம்பாட்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவது, பிஎம்-சேது திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன் தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பெருமளவிலான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
குறிப்பாக உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் திறன்மிக்க பணியாளர்களுக்கான தேவை அதிகரித்துவரும் நிலையில், இதுதொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. திறன் மேம்பாட்டுத் திட்டங்களை மாறிவரும் தொழில்துறை தேவைகள், சர்வதேச தர நிலைகள், உலகளாவிய தொழிலாளர் இடப்பெயர்வை வாய்ப்புகளுக்கு ஏற்ப அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331682®=3&lang=1
***
TV/IR/LDN/GS