பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொது சுகாதாரம் குறித்து பழங்குடியின மருத்துவர்களுக்கான தேசிய அளவிலான பயிலரங்கு

இடுகை இடப்பட்ட நாள்: 02 NOV 2026 11:28AM by PIB Chennai

மத்திய பழங்குடியின விவகாரத்துறை, தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், பழங்குடியினருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கான தேசிய அளவிலான பயிலரங்கு ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் நடைபெற்றது. மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் திரு மணிஷ் தாகூர் தொடங்கி வைத்த இந்தப் பயிலரங்கில், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 550 மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

இதில், பழங்குடியினருக்கான பொது மருத்துவத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து அவைகளை தடுப்பதற்கான சிசிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தோல், கல்லீரல் தொடர்பான சிகிச்சைகள், மனநல மேம்பாடு உள்ளிட்டவை குறித்தும் இந்தப் பயிலரங்கில் ஆலோசிக்கப்பட்டது.    

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331397&reg=48&lang=1

 

***

SS/LN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2331582) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी