நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி, விநியோகம் கணிசமாக அதிகரித்து சாதனை

இடுகை இடப்பட்ட நாள்: 02 NOV 2026 11:37AM by PIB Chennai

நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க மத்திய நிலக்கரி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் பயனாக இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. சொந்த மற்றும் வணிகரீதியிலான நிலக்கரி சுரகங்களில் இருந்து 2026 அக்டோபர் வரை 22.03 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது. 2025 அக்டோபர் மாதம் 15.49 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது இது 42 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. நிலக்கரி விநியோகம் 2025 அக்டோபரில் 15.48 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், தற்போது 21.11 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. நிலக்கரி விநியோக சதவீதம் 36 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், லொஹரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கரி சுரங்கத்திற்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது நிலக்கரி உற்பத்திக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக நிலக்கரி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சொந்த மற்றும் வணிகரீதியிலான சுரங்கங்களின் எண்ணிக்கை 87-ஆக அதிகரித்துள்ளது.

உற்பத்தியை அதிகரித்ததன் காரணமாக, நிலக்கரி இறக்குமதி செய்வது குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி விநியோகத்தை அதிகரிப்பது, மூலப்பொருட்கள் உற்பத்தியை உயர்த்துவது, முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய நிலக்கரி அமைச்சம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தேசிய அளவில் எரிசக்தி, தொழிற்சாலைகளுக்கான நிலக்கரி தேவையை பூர்த்தி செய்யமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.     

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331406&reg=48&lang=1

***

SS/LN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2331565) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी