இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2026 9:34AM by PIB Chennai
இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே விரிவான பொருளாதார, உத்திசார்ந்த நட்புறவை வலுப்படுத்தும் வகையிலான பேச்சுகள் பிரஸல்சில் நடைபெற்றது. இதில் மத்திய வர்த்தகத்துறை செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், வர்த்தக, பொருளாதார பாதுகாப்பு தலைமை இயக்குநர் திருமிகு டிட்டே ஜூல் ஜோர்கென்சன், சர்வதேச கூட்டாண்மைத் தலைமை இயக்குநர் கோயென் டோயென்ஸ், ஐரோப்பிய ஆணைய வரிவிதிப்பு, சுங்கத்துறை யூனியன் தலைமை இயக்குநர் திரு ஜெராசிமோஸ் தாமஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருமிகு டிட்டே ஜூல் ஜோர்கென்ஸ் உடனான சந்திப்பின்போது, இருதரப்பு வர்த்தகத்தை எளிமைப்படுத்துதல், சந்தை அணுகலை மேம்படுத்துதல், இந்தியா, ஐரோப்பிய யூனியனின் வணிகங்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் குறித்து இருதரப்பினரும் விவாதித்தனர். நியாயமான, சமநிலையான, இருதரப்பிற்கும் நலன்பயக்கக்கூடிய ஒப்பந்தத்தை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினார்கள். அத்துடன் நடைமுறைகளை அமல்படுத்துதல் தொடர்பான விவகாரங்களுக்கு தீர்வுகாண நெருக்கமாக ஆலோசிக்கவும் ஒப்புக்கொண்டனர்.
திரு கோயென் டோயென்ஸூடனான சந்திப்பின்போது, இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே மேம்பாட்டிற்கான ஒத்துழைப்பு, உத்திசார்ந்த நட்புறவுகளை வலுப்படுத்துதல் குறித்து இருதரப்பினரும் தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். அப்போது நிலையான வளர்ச்சி, தூய்மை எரிசக்தி, பசுமை தொழில்நுட்பங்கள் அதுதொடர்பான துறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331376®=48&lang=1
***
SS/IR/LDN/GS