சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சென்ட்ரல் கிரானிக்கிள் நாளிதழில் வெளியான வேலைவாய்ப்பு, பயிற்சி தொடர்பான செய்தி குறித்து, சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் விளக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 NOV 2026 3:28PM by PIB Chennai

போபாலில் இருந்து வெளிவரும் தி சென்ட்ரல் கிரானிக்கிள் நாளிதழில் அக்டோபர் 31, 2026 அன்று வெளியான ஒரு செய்தியில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் உண்மை நிலையை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது.

மத்தியப் பிரதேச வேலைவாய்ப்பு, பயிற்சி கவுன்சில், வேலைவாய்ப்புத் தரவுகளைச் சரிபார்க்காமல், வேலைவாய்ப்புகளின் அடிப்படையில் கோடிக்கணக்கான பணத்தை வழங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது.

உண்மை நிலவர அறிக்கை, துல்லியமாகவும் உண்மைச் சூழலுடனும் வெளியிடப்படுகிறது.

பட்டியல் வகுப்பினர் மேம்பாட்டு ஆணையர் அலுவலகம், “பட்டியல் வகுப்பினருக்கான சிறப்பு மத்திய உதவி துணைத் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக ரூ. 3,241.37 லட்சம் தொகையை அனுமதித்தது. இந்தத் தொகைக்கு எதிராக, 2021–22-ம் ஆண்டில் மத்தியப் பிரதேச வேலைவாய்ப்பு, பயிற்சி நிறுவனத்திற்கு மொத்தம் ரூ. 2,945.37 லட்சம் வழங்கப்பட்டது. இந்தத் தொகையில் ரூ. 1,296.00 லட்சம் (26 நவம்பர் 2021 தேதியிட்ட ஆணை எண் 4695-ன் படி), ரூ. 1,649.37 லட்சம் (25 மார்ச் 2022 தேதியிட்ட ஆணை எண் 10283-ன் படி) ஆகியவை அடங்கும்.

மத்தியப் பிரதேச வேலைவாய்ப்பு, பயிற்சி மையம், 2021-22-ம் ஆண்டிற்காக, பட்டியல் வகுப்பு பிரிவைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களின் பயனாளிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக முன்மொழிவு கோரும் அறிவிப்பை வெளியிட்டது. தேர்வு செயல்முறையைத் தொடர்ந்து, 34 பயிற்சி வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, பின்னர் அவற்றுக்குப் பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இவற்றில், ஆறு நிறுவனங்கள் பணியைத் தொடங்கவில்லை.

 

28 நிறுவனங்கள் 4,952 பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளித்தன. இந்த மையத்தால் நடத்தப்படும் பயிற்சித் திட்டங்கள், மத்திய அரசின் திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குகின்றன. அனைத்துப் பயிற்சி நடவடிக்கைகளும் ஒரு பிரத்யேக இணையதளம் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன.

எனவே போபாலில் இருந்து வெளியாகும் சென்ட்ரல் கிரானிக்கிள் நாளிதழில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331174&reg=3&lang=1

***

TV/PLM/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2331249) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati