மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிக்கிமில் மீன்வளத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 01 NOV 2026 11:46AM by PIB Chennai

மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், நாளையும், நாளை மறுநாளும் (2026 நவம்பர் 2, 3) சிக்கிம் மாநிலத்தின் காங்டாக், மாங்கன் மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, மத்திய அமைச்சர் சிக்கிமில் மீன்வள மேம்பாட்டுத் திட்டங்களை ஆய்வு செய்கிறார். இயற்கை மீன் வளர்ப்பிற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை அவர் தொடங்கி வைக்கிறார். பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.375 லட்சம் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன் மீன் உறபத்தியாளர்களுடன் அமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.

மீன் உற்பத்தியாளர்களுக்கான கடன் அட்டைகளை அவர் வழங்கவுள்ளதுடன், மீனவர்களுக்கான மாநில அரசின் நதி உதவித் திட்டத்தின் கீழ் காசோலைகளையும் வழங்கவுள்ளார்.

மங்ஷிலாவில் மீன்வளத் துறை சார்ந்தவர்களுடனும், மீன் வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தினருடனும் அமைச்சர் கலந்துரையாடுகிறார். இந்தக் கலந்துரையாடல்கள், சிக்கிமில், குறிப்பாக தொலைதூர, புவியியல் ரீதியாக சவாலான பகுதிகளில் உள்ள மீன்வள மேம்பாட்டுத் தேவைகளை மதிப்பிட உதவும்.

அமைச்சரின் இந்தப் பயணம், சிக்கிமிலும் வடகிழக்குப் பகுதிகளிலும் நவீன, நிலையான சந்தை சார்ந்த மீன்வளச் சூழலமைப்பின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331082&reg=3&lang=1

***

SK/PLM/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2331130) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu