சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி நடைபெற்ற ஒற்றுமைக்கான ஓட்டத்தில் மத்திய சட்டத்துறை பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2026 5:07PM by PIB Chennai

மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டத்துறை, 2026 அக்டோபர் 31 அன்று தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி, புது தில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒற்றுமைக்கான ஓட்டத்தில் பங்கேற்றது.

இந்த ஒற்றுமைக்கான ஓட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சர்தார் வல்லபாய் படேலின் 151-வது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஓட்டம், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு,  பிணைப்பைப் பேணிக் காப்பதற்கான ஒட்டுமொத்த உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில் இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமித் ஷா, இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில், சர்தார் படேல் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை எடுத்துரைத்தார். மேலும், இந்தியாவின் மொழி, கலாச்சாரம்,  மத பன்முகத்தன்மையே நாட்டின் வலிமை என்று அவர் குறிப்பிட்டார். போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர், இது நாட்டின் இளைஞர்களுக்கும், எதிர்காலத்திற்கும் மிக அவசியமானது என்று கூறினார்.

 

சட்டத்துறையின் செயலாளர் டாக்டர் ராஜீவ் மணி, அந்தத் துறையின் மூத்த அதிகாரிகள், பணியாளர்களுடன் இணைந்து இந்த ஒற்றுமைக்கான ஓட்டத்தில் பங்கேற்றார். இது தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு, கூட்டுப் பொறுப்புணர்வு ஆகிய கொள்கைகளின் மீது சட்டத்துறை கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330905®=3&lang=1

(Release ID: 2330905)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330982) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी