இடுகை இடப்பட்ட நாள்:
31 OCT 2026 2:16PM by PIB Chennai
மத்திய பெரு நிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம், தூய்மை குறித்த நாடு தழுவிய சிறப்பு இயக்கம் 6.0-ன் மூலம் ரூ11,41,975 வருவாய் ஈட்டியுள்ளது.
அலுவலகத் தூய்மை, ஆவண மேலாண்மை, பொதுமக்களின் குறைதீர்ப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பதிவுசெய்து, தூய்மை குறித்த நாடு தழுவிய சிறப்பு இயக்கம் 6.0-ஐ அந்த அமைச்சகம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
தூய்மையான, திறமையான பணியிடத்திற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதமாக, அந்த அமைச்சகம் 75 தூய்மை இயக்கங்களை நடத்தி தனது இலக்கை முழுமையாக அடைந்துள்ளது. இந்த இயக்கங்கள் மூலம் 23,285 சதுர அடி அலுவலக இடத்தை விடுவித்ததுடன், மின்னணுக் கழிவு மறுசுழற்சியின் கணிசமான பங்களிப்புகளையும் வருவாயையும் ஈட்டியுள்ளன. மின்னணுக் கழிவு மேலாண்மையின் கீழ், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் மின்சார உபகரணங்கள் ஆகியவற்றிலிருந்து ரூ 5,22,000 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
ஆவண மேலாண்மையில், அமைச்சகம் மறுஆய்வுக்காக இலக்கு வைக்கப்பட்ட 9,309 பொருட்களில் 3,658 அசல் கோப்புகளை ஆய்வு செய்து, அவற்றை வெற்றிகரமாக நீக்கியது. மேலும், பொதுமக்களின் குறைகளைக் கையாள்வதில் உயர் திறனைப் பேணி, 330 பொதுக் குறைகளில் 322 குறைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. 435 பொதுக் குறை மேல்முறையீடுகளில் 342-ஐ அனுமதித்தது. மேலும், இந்த அமைச்சகம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் அலுவலகம், மாநில அரசுகளிடமிருந்து வந்த பரிந்துரைகளை வெற்றிகரமாகக் கையாண்டு விரைவுபடுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330813®=3&lang=1
(Release ID: 2330813)
****
TV/SV/SH