தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹைதராபாத்தில் மொபைல் நெட்வொர்க் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2026 3:04PM by PIB Chennai

இந்திய தகவல் ஒழுங்குறை ஆணையம், ஆந்திராவில் உள்ள அதோனி- மந்த்ராலயம் ஹைதராபாத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மொபைல் நெட்வொர்க்கின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தது. மொபைல் நெட்வொர்க் சரியாக கிடைக்கிறதா என்பது குறித்தும், இணைப்பு துண்டிப்பு, குரலின் தரம் குறித்தும் பரிசோதனை செய்யப்பட்டது. 2ஜி முதல் 5ஜி வரையிலான அலைவரிசையையும் பரிசோதித்து பார்க்கப்பட்டது. மக்கள் அதிகம் கூடும் விமானம், ரயில், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இதுதொடர்பான அறிக்கையை, சம்மந்தப்பட்ட மொபைல் நிறுவனங்களுக்கு இந்திய தகவல் ஒழுங்குமுறை ஆணையம் அனுப்பி வைத்துள்ளது. செல்போன் சேவையில் உள்ள குறைகளை கண்டறிந்து, அவைகளை சரிசெய்யும் நோக்கத்திற்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தொலை தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330384&reg=48&lang=1

***

SS/LN/ SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2330697) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी