நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒதுக்கீடு பெற்ற நிலக்கரி தொகுதிகளில் விரைவில் உற்பத்தியை தொடங்குவது குறித்து நிலக்கரி அமைச்சகம் ஆலோசனை

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2026 6:30PM by PIB Chennai

நிலக்கரி அமைச்சகம் இன்று (30.10.2026) கோவாவில் 'எதிர்காலத்திற்கான சுரங்கம்' என்ற தலைப்பில் கலந்தாய்வை நடத்தியது. நாள் முழுவதும் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில், சொந்த, வணிக நிலக்கரிச் சுரங்க தொகுதி ஒதுக்கீடு பெற்றவர்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், மத்திய நிலக்கரிச் சுரங்க ஆணையம், சுற்றுச்சூழல் அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஒதுக்கப்பட்ட சுரங்கத் தொகுதிகளை விரைவாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது, அடுத்தகட்ட கொள்கை சீர்திருத்தங்கள், பொறுப்பான சுரங்கம் தோண்டுதல் ஆகியவை குறித்து அவர்கள் விவாதித்தனர்.

நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். ஒதுக்கீடு பெற்றவர்களிடம் உரையாற்றிய செயலாளர், ஒதுக்கீடு பெற்ற பின் உற்பத்தியைத் தொடங்காத நிலக்கரித் தொகுதி என்பது, பயன்படுத்த முடியாத ஒரு உற்பத்தித் திறன் என்றும் அவை விரைவில் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330546&reg=3&lang=1

(Release ID : 2330546)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330684) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English