சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தையொட்டி தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2026 5:30PM by PIB Chennai

இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் படேல். இவர், இந்தியாவில் உள்ள சமஸ்தானங்களை ஒன்றிணைத்த பெருமைக்குரியவர். இந்நிலையில், அக்டோபர் 31ம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் 151வது பிறந்த தினத்தையொட்டி, மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் சட்டத்துறை சார்பில், தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுதில்லியில் உள்ள சட்டத்துறை அலுவலகத்தில், சட்டத்துறை செயலாளர் ராஜிவ் மணி முன்னிலையில் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர். சர்தார் வல்லபாய் படேலின் செயல்பாடுகளால் உருவான இந்திய ஒருங்கிணைப்பின் உணர்வை பின்பற்றி நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பை பேணவும், உள்நாட்டு பாதுகாப்புக்கு பங்களிப்பு செய்வது எனவும் உறுதிமொழி ஏற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330489&reg=3&lang=1&_gl=1

****

SK/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330675) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी