பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நல்லாட்சி தொடர்பான 41-வது தேசிய இணையவழி கருத்தரங்கு

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2026 5:45PM by PIB Chennai

41-வது தேசிய நல்லாட்சி இணையவழிக் கருத்தரங்கு இன்று (2026 அக்டோபர் 30) நடைபெற்றது. இதில், நல்லாட்சிக்கான பிரதமரின் விருதுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள்' என்ற கருப்பொருளின் கீழ், 2024-ம் ஆண்டுக்கான விருதைப் பெற்ற ராஜ்கோட் மாவட்டத்தின் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் 330-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் நிர்வாக சீர்திருத்தத் துறைகளின் மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், மாநில, மாவட்ட கள அலுவலர்கள், மத்திய, மாநில நிர்வாகப் பயிற்சி நிறுவனங்களின் அலுவலர்கள் இந்த இணையவழிக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

இதுவரை 40 இணையவழி கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு இணையவழி கருத்தரங்கிலும், துறைசார் அதிகாரிகள், மாநில அரசுகள், மாவட்ட ஆட்சியர்கள், மாநில நிர்வாகப் பயிற்சி நிறுவனங்கள், மத்திய பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 1000 அதிகாரிகள் கலந்துகொண்டு வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330512&reg=3&lang=1&_gl=1

(Release ID : 2330512)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330670) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी