இடுகை இடப்பட்ட நாள்:
30 OCT 2026 6:25PM by PIB Chennai
நாட்டின் கடல்சார் எல்லைகளைப் பாதுகாப்பதில் இந்திய கடற்படையின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவைக்கு மரியாதை செலுத்தும் வகையில் மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான இசிஎல் நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட போர்க்கப்பல் மாதிரிப் வடிவமைப்பை வழங்கியது.
நிலக்கரி சுரங்கங்களில் பயன்பாடற்றிருந்த இயந்திரங்களின் பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மாதிரிப் போர்க்கப்பல் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் கைவினைத்திறனை எடுத்துக்காட்டுவதுடன் கடற்படை வீரர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இசிஎல் நிறுவனத்தால் செயல்பட்டு வரும் தூய்மைப் பராமரிப்புக்கான சிறப்பு இயக்கத்தின் கீழ் கழிவிலிருந்து செல்வம் என்ற முன்முயற்சியின் மூலம் இந்த மாதிரிப் போர்க்கப்பல் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330542®=3&lang=1
****
SK/SV/SU/SH