சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை மூத்த அதிகாரிகள் ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2026 5:43PM by PIB Chennai

தேசிய ஒற்றுமை தினத்தை  நாளை (31.10.2026) முன்னிட்டு , மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் தலைமையில், இன்று (30.10.2026) தேசிய தலைநகர் தில்லியில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்றனர்.

 

தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பைப் பேணுவதற்கும், சக குடிமக்களிடையே தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாட்டின் செய்தியைப் பரப்புவதற்கும் அதிகாரிகளின் கூட்டு உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.

 

நாட்டின் ஒருங்கிணைப்பைச் சாத்தியமாக்கிய சர்தார் வல்லபபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையையும் செயல்களையும் நினைவுகூர்ந்து, தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்கும் நாட்டின் உள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பங்களிக்க மூத்த அதிகாரிகளும் அலுவலர்களும் உறுதியுடன் தீர்மானித்தனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330511&reg=3&lang=1&_gl=1

(Release ID : 2330511)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330629) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी