நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் கணக்குகள் குறித்த மாதாந்திர ஆய்வு அறிக்கை வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2026 5:02PM by PIB Chennai

மத்திய அரசின் கணக்குகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு மாதந்தோறும் அது தொடர்பான ஆய்வறிக்கையை நிதி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.  இதன்படி, 2026 செப்டம்பர் மாதத்திற்கான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  இந்தக் காலகட்டத்தில் மத்திய அரசு மொத்த வருவாய் ரூ.18,35,422 கோடியாக உள்ளது.  இது நடப்பு நிதியாண்டிற்கான வரவு தொடர்பான மதிப்பீட்டில் 50.3 சதவீதமாகும்.  இதில், மத்திய அரசுக்கு கிடைத்த நிகர வரி வருவாய் ரூ.12,76,088 கோடியாகவும், வரி அல்லாத பிற இனங்கள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.4,80,732 கோடியாகவும், கடன் அல்லாத மூலதன வரவாக ரூ.78,602 கோடியாகவும் உள்ளது.

இதே காலகட்டத்தில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வரி பகிர்வாக ரூ.6,99,409 கோடியை விடிவித்துள்ளது.  இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் ரூ.67,658 கோடி கூடுதலாகும்.

மத்திய அரசின் மொத்த செலவினத் தொகை ரூ.25,49,835 கோடியாக உள்ளது.  இது நடப்பு நிதியாண்டிற்கான வரவு மதிப்பீட்டில் 47.7 சதவிதமாகும்.  இதில் வருவாய் இன செலவினமாக ரூ.18,95,288 கோடியும், மூலதன செலவாக ரூ.6,54,547 கோடியும் செலவிடப்பட்டுள்ளன.  மொத்த வருவாய் செலவினத்தில் கடனுக்கான வட்டியாக ரூ.6,46,010 கோடி செலவிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330455&reg=3&lang=1

****

SK/SV/SU/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330617) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi