இடுகை இடப்பட்ட நாள்:
30 OCT 2026 4:50PM by PIB Chennai
மத்திய நிதித்துறையின் கீழ் இயங்கும் நிதி சேவை துறை சார்பில், சிறப்பு பிரச்சாரம் 6 என்ற தலைப்பில் நாடு முழுவதும், தூய்மை, குறைதீர்ப்பு பணிகள் செய்யப்பட்டன. பொதுத்துறை வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், ஊரக வங்கிகள் உள்ளிட்டவை இந்த இப்பணியில் பங்கேற்றன. அலுவலகங்கள், கடற்கரைகள் உள்ளிட்ட இடங்கள் சுத்தம் செய்யப்பட்டன. இதில் துறைசார்ந்த பணியாளர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு பிரச்சார நிகழ்வு மூலம், 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. பழைய பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் ரூ.4.12 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அளித்த 31,327 புகார்களுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, சைபர் குற்றங்கள் தொடர்பாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330448®=3&lang=1&_gl=1
****
SK/LN/SH