தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
30 OCT 2026 4:32PM by PIB Chennai
இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், தொலைதொடர்பு நெட்வொர்க் மற்றும் சேவை ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வரைவை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து முதலீட்டாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் தொலைதொடர்பு துறை முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக, பொருளாதாரம், வர்த்தகம், தேசிய பாதுகாப்பு, அவசரத்தேவை ஆகியற்றில் தொலைதொடர்பு சேவை அளப்பரியது. இந்நிலையில், தொலைதொடர்பு சேவையில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துவது தற்போது இன்றியமையாதாகி விட்டது. எனவே, பாதுகாப்பு கருதி வழிகாட்டு நெறிமுறைகள் உருவக்கப்பட்டுள்ளன. இது இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கருத்துக்களை, முதலீட்டாளர்கள் 2026 நவம்பர் 27ம் தேதிக்குள் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330429®=48&lang=1
****
SK/LN/SH