சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

துப்புரவு தொழிலாளியின் கண்ணிய பணிசூழலுக்கு வழிவகுத்த நமஸ்தே திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 7:29PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான ரமேஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒரு துப்புரவுத் தொழிலாளி. நமஸ்தே திட்டத்தின் ஆதரவுடன், அவர் தற்போது பாதுகாப்பான, உறுதியான எதிர்காலத்தை நோக்கி முன்னேறி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில், பணியிடப் பாதுகாப்பு, உழைப்பின் கண்ணியம்,  நிறுவன ரீதியான ஆதரவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இவரது பயணம் எடுத்துரைக்கிறது.

சரியான நேரத்தில் வழங்கப்படும் உதவிகளும், துல்லியமான நலத்திட்ட நடவடிக்கைகளும் துப்புரவுத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கையில், அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ரமேஷின் பயணம் ஒரு சிறந்த உதாரணம்.

அத்தியாவசியமான துப்புரவுப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கான பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யவும், வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும், கண்ணியமான சூழலை உருவாக்கவும் 'நமஸ்தே' திட்டம் பங்களிக்கிறது என்பதற்கு ரமேஷின் அனுபவம் ஒரு சான்றாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330204&reg=3&lang=1

***

SK/SV/PS 


(வெளியீட்டு அடையாள எண்: 2330483) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी