தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய பணி சேவை மையங்கள் நடத்தும் தீபாவளி கண்காட்சி

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 6:39PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேலைவாய்ப்பு தலைமை இயக்குநரகத்தின் ஒரு அங்கமான  'மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய பணி சேவை மையங்கள்', நாடு முழுவதும் உள்ள தங்களது மையங்களில் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளின் கைவினைப் பொருட்கள், கைவினைத்திறன்,  தொழில்சார் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் ஒரு பிரம்மாண்டமான தீபாவளி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

தில்லி, திருவனந்தபுரம், டேராடூன், புவனேஷ்வர், கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களில் உள்ள இந்த  மையங்களில் பயிற்சி பெற்றவர்கள், முன்னாள் பயிற்சியாளர்கள் உருவாக்கிய பொருட்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன. சணல், துணிப் பைகள், மெழுகுவர்த்திகள், மின்னணு பொருட்கள், ஓவியங்கள், சோப்புகள், பின்னல் வேலைப்பாடுகள், ஆடைகள், ஜவுளிப் பொருட்கள், பின்னல் வேலைகள், எம்பிராய்டரி, மரவேலைப்பாடுகள், பண்டிகை கால அலங்காரப் பொருட்கள் எனப் பல்வேறு வகையான கைவினை, திறன் சார்ந்த பொருட்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்தக் கண்காட்சி, அவர்களுக்குப் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தவும், பார்வையாளர்களுடன் நேரடியாக உரையாடவும், கருத்துகளைப் பெறவும், மேலும் விற்பனை, சுயதொழில் மற்றும் சந்தை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் ஒரு சிறந்த தளமாக அமைந்தது. இங்கு காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய பணி சேவை மையங்களில் வழங்கப்பட்ட பாரம்பரிய கைவினைத்திறன் மற்றும் நவீன தொழில்சார் பயிற்சி ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கும் வகையில் இருந்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330165&reg=3&lang=1

***

SK/SV/PS 


(வெளியீட்டு அடையாள எண்: 2330462) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी