சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மதுப்பழக்கத்திலிருந்து மீண்டு, வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ள உதவும் தேசிய செயல்திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 6:47PM by PIB Chennai

திரு மகேஷ் குமாரின் (34 வயது - பெயர் மாற்றப்பட்டுள்ளது) பயணம், கருணையான கவனிப்பும், தொடர்ச்சியான மறுவாழ்வு நடவடிக்கைகளும்  தனிநபர்கள் தங்களது வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்துக் கொள்ளவும், குடும்ப உறவுகளை வலுப்படுத்தவும், கண்ணியம்,  புதுப்பிக்கப்பட்ட நோக்கத்துடன் கூடிய எதிர்காலத்தை நோக்கி முன்னேற்றம் பெறவும்  உதவுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. சரியான நேரத்தில் வழங்கப்படும் சிகிச்சையும் வாழ்வாதார ஆதரவும், தனிநபர்கள் போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வரவும், குடும்ப நலனை பாதுகாக்கவும் உதவிடும் என்பதை அவரது பயணம் பிரதிபலிக்கிறது.

கர்நாடகாவின் யாதகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு குமார், ஆரோக்கியமான மற்றும் அதிக தன்னம்பிக்கை கொண்ட வாழ்க்கையை நோக்கி முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

முன்பு, அவர் ஒரு விவசாயக் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்தார். மதுப்பழக்கம் அவரது உடல்நலம், வேலைவாய்ப்பைப் பாதித்ததுடன், அவரது குடும்பத்தில் சிக்கல்களுக்கும் வழிவகுத்தது.

 

 

கிடைக்கக்கூடிய சிகிச்சை முறைகள் குறித்த குறைந்த விழிப்புணர்வு, நிதி நெருக்கடிகள் காரணமாக, பொருத்தமான சிகிச்சையைப் பெறுவது சவாலாக இருந்தது.

யாதகிரியில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவி மாவட்ட போதை மீட்பு மையம் மூலம் வழங்கப்படும் சிகிச்சை, ஆலோசனை, குடும்ப ஆதரவு, வாழ்வாதார வழிகாட்டுதல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு, சக குழுவினருடனான கலந்துரையாடல்கள், மீண்டும் போதைக்கு அடிமையாவதைத் தடுக்கும் அமர்வுகள் ஆகியவை, அவர் தனது நீண்டகால நல்வாழ்வு மற்றும் தன்னம்பிக்கையில் கவனம் செலுத்த உதவியுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330172&reg=3&lang=1

(Release ID: 2330172)

****

SK/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330271) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu