பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மக்கள் திட்ட பிரச்சாரம் 2026-27 குறித்த தேசிய பயிலரங்கு: மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 6:20PM by PIB Chennai

மக்கள் திட்ட பிரச்சாரம் 2026-27’ குறித்த ஒரு நாள் தேசிய பயிலரங்கிற்கு, மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. 

புதுதில்லியில், 2026 அக்டோபர் 30 அன்று, மத்திய பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், இந்தப் பயிலரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சியில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு  வினீத் ஜோஷி, குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் செயலாளர் திரு அசோக் கே கே மீனா, ஊரக மேம்பாட்டுத் துறையின் செயலாளர் திரு ரோஹித் கன்சால் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இந்தப் பயிலரங்கில், முக்கிய சாதனைகள், கருப்பொருள் சார்ந்த பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்களின் அதிகரித்து வரும் பங்களிப்பு  குறித்து ஆய்வு செய்யப்படும். இது, 2027-28-ம் நிதியாண்டிற்கான மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரிப்பதற்குப் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உதவிடும். இந்நிகழ்ச்சியின் போது, மக்கள் திட்ட பிரச்சாரம் 2026-27 குறித்த கையேடு வெளியிடப்படும்.

 

 

மேலும், மின் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள், பேட்டரி பரிமாற்ற நிலையங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும். தொழில்நுட்ப அமர்வுகளில், கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்களின் தரம், 16-வது நிதி ஆணையத்தின் கீழ் வழங்கப்படும் நிபந்தனைக்குட்பட்ட மற்றும் நிபந்தனையற்ற மானியங்கள், பஞ்சாயத்துகளின் சொந்த வருவாய், ‘சமர்த் பஞ்சாயத்து’ இணையதளம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330147&reg=3&lang=1

(Release ID: 2330147)

****

SK/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330236) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी