இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2026 6:25PM by PIB Chennai
மத்திய உரத்துறை, அதன் கீழ் இயங்கும் அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து, அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31, 2026 வரை தூய்மைப் பராமரிப்பிற்கான சிறப்பு இயக்கம் 6.0-ஐ முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
நிர்வாக சீர்திருத்தம், மக்கள் குறைதீர்ப்புத் துறையின் வழிகாட்டுதல்களின் படி, அரசு அலுவலகங்களில் தூய்மையைப் பழக்கமாக்குதல், நிலுவையில் உள்ள பணிகளைக் குறைத்தல், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அக்டோபர் 29, 2026 நிலவரப்படி, உரத்துறையும் அதன் பொதுத்துறை நிறுவனங்களும் கோப்புகளை (நேரடி மற்றும் மின்னணு கோப்புகள்) ஆய்வு செய்தல், தேவையற்ற பழைய ஆவணங்களை நீக்குதல், பயனற்ற பொருட்களை அகற்றுதல், அலுவலக வளாகங்களில் தூய்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன. மேலும், பொதுமக்களின் குறைகள், மேல்முறையீடுகள், நிலுவையில் உள்ள பிற விவகாரங்களை விரைந்து தீர்ப்பதிலும் இந்த இயக்கம் கவனம் செலுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330150®=3&lang=1
(Release ID: 2330150)
****
SK/SV/SH