ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஹைதராபாத்தில், தெலுங்கு ஆயுர்வேத கையெழுத்துப் பிரதிகளைப் படியெடுத்தல், தொகுத்தல் குறித்த மூன்று நாள் பயிலரங்கம் நிறைவு

இடுகை இடப்பட்ட நாள்: 28 OCT 2026 8:51PM by PIB Chennai

ஹைதராபாத்தில் உள்ள இந்திய மருத்துவ பாரம்பரியத்திற்கான தேசிய நிறுவனத்தில், ‘தெலுங்கு ஆயுர்வேத கையெழுத்துப் பிரதிகளைப் படியெடுத்தல் தொகுத்தல்’ குறித்த மூன்று நாள் பயிலரங்கம் இன்று நிறைவடைந்தது. இதில், தெலுங்கு மொழியிலான பழங்கால ஓலைச்சுவடிகள்,காகித ஆவணங்களில் பாதுகாக்கப்பட்டுள்ள மருத்துவ தகவல்களை வாசித்தல், படியெடுத்தல், தொகுத்தல் திறனாய்வு செய்து பதிப்பித்தல் போன்ற திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தப்பட்டது.

 

 

இந்த பயிலரங்கம், ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் பத்மஸ்ரீ வைத்திய ராஜேஷ் கோடேச்சா, அமைச்சகத்தின் ஆலோசகர் (ஆயுர்வேதம்) டாக்டர் கௌஸ்துப உபத்யாயா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. பயிலரங்கின் போது, ​​30 தெலுங்கு ஆயுர்வேத கையெழுத்துப் பிரதிகளில் உள்ள 2,040 கையெழுத்துப் பிரதிகள் படியெடுக்கப்பட்டு, பிழைதிருத்தம் செய்யப்பட்டு, தொகுக்கப்பட்டன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329782&reg=3&lang=1

***

SK/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330223) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu