இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 8:50PM by PIB Chennai
குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு பொது கொள்முதல் வாய்ப்புகளை எளிதாக்குதல் மற்றும் செலவு குறைந்ததாக மாற்றுவதற்கான சீர்திருத்தங்கள் குறித்த சிறப்பம்சங்கள். அரசு மின்னணு சந்தை மற்றும் இந்திய சிறுதொழில் அமைப்பு இணைந்து, அரசு மின்னணு சந்தை விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் 2026'-ன் ஒரு பகுதியாக ஒரு நிகழ்வை நடத்தின.
இதில், குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு பொது கொள்முதல் நடைமுறைகளை மேலும் எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்ட முக்கிய சீர்திருத்தங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
2024-ல் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம்,நாடு முழுவதும் பல நேரடி நிகழ்வுகளையும், 108 மெய்நிகர் மாநாடுகளையும் நடத்தியுள்ளது. இதன் நோக்கம், விழிப்புணர்வை ஏற்படுத்துதல், டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய உதவுதல் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்தத் தளத்தைப் பயன்படுத்தி அரசு கொள்முதல் வாய்ப்புகளைப் பெற வழிகாட்டுவதாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329780®=3&lang=1
செய்தி அடையாள எண்:2329780
***
SK/VK/SH